மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவின் அனுதாபச் செய்தி



றாவூர் நகர சபையின் உப தவிசாளரும் சமூக செயற்பாட்டாளரும் மக்கள் பணிக்காக தன்னை களத்தில் நின்று அர்ப்பணித்த ஒரு இளம் துடிப்புள்ள நல்ல பண்பாளனுமான என்றும் என் அன்பான லூலூ றியாழ் ஹாஜி எனும் இளம் இரத்தம் தனது 42ஆவது வயதிலேயே இவ்வுலகை விட்டு விடை பெற்றது எனும் செய்தி பேரதிர்ச்சியாய் உள்ளது...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....

தன் தந்தையின் வழியில் என்றும் என் அரசியல் பயணத்தில் இறுதி வரை இணைகரமாக செயலாற்றிய ஒரு உண்மையான இளம் மக்கள் சேவகனை இன்று இழந்து நிற்கிறேன் ...
எப்போதும் அகமும் முகமும் மலர்ச்சியுடன் அனைவரையும் பேதங்கள் இன்றி அனுசரித்து செயலாற்றிய ஒரு உன்னதமான உடன் பிறப்பினை இழந்து நிற்கிறோம்...
இவ்விழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும், அவரது குணாதிசயங்களும் நம்பிக்கையும் துடிப்பும் எப்போதும் அவருக்கே உரித்தான உன்னதமான பண்புகளுக்கும் அவருக்கு நிகர் அவராகத்தான் இருக்கும்.

எப்போதும் தன்னால் முடிந்த பணிகளை மக்களுக்காக செய்வதில் அதீத அக்கரை உள்ள ஒருவராகவே தன் சிறு வயது முதல் இன்று வரை அவர் செயலாற்றி வந்துள்ளார் .

அரசியல், வட்டாரம், எல்லை என தன்னை மட்டுப்படுத்தாமல் எப்போதும் தன்னால் ஆன பணிகளை நாடுவோருக்கும் தேடுவோருக்கும் செய்வதில் என்றும் அவர் சளைத்தது கிடையாது,
அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொண்டு மேலான சுவனபதியை வழங்குவதோடு அவர் செய்த அத்தனை நன்மையான காரியங்களையும் ஏற்று பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக ....இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :