அம்பாறை மாவட்ட, மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தை தரமுயர்த்தும் வைபவமும் 2022.10.08 ஆம் திகதி இடம்பெற்றது
மாவட்ட வைத்திய அதிகாரி டாகடர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாகவும் கல்முனை சுகாதார பணிமனையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித் கௌரவ அதிதியாகவும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர் விசேட அதிதியாகவும் தரமுகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் பி.ஜி.பி. டானியல் , சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத், தொற்றா நோய்த் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாத், ஆயுள்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ. நபீல், பிராந்திய பற்சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எச்.எம்.ஸஃரூக், கணக்காளர் உசைனா பாரிஸ் பிராந்திய மருந்தாளர் இந்திரகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், பொலிஸார், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment