அக்கரைப்பற்று கல்வி வலய பாலமுனை கமு/அக்/ மின்ஹாஜ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) முகாமைத்துவ குழு ஏற்பாட்டில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு வியாழக்கிழமை பாடசாலை அதிபர் கே.எல்.உபைத்துல்லா தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்குப் பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளரும், பிரபல உயிரியல் பாட ஆசிரியருமான றிசாத் செரீப் பிரதம அதிதியாக பங்கேற்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்ததுடன் தாமே இயற்றிய பாடலொன்றையும் பாடி ஆசிரியர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
இதன் போது ஆசிரியர்களை வாழ்த்தி மாணவர்களின் பலவகையான நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டதுடன் ஆசிரியர்களின் நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி மற்றும் உதவி அதிபர்கள், பிரிவுத்தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment