இதனை உடல், உள, குடும்ப, சமூக, ஆன்மீகம் என்றவாறு வகைப்படுத்தலாம்.
எமது உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டி நாம் பல வகையான செயற்பாடுகளை அன்றாட வாழ்வில் முன்னெடுக்கிறோம். (உ+ம்) நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து தினமும் உட்கொள்கின்றோம், வைத்தியரிடம் சென்று எமக்கு தேவையான பல ஆலோசனைகளையும் சிகிச்சை முறைகளையும் அவ்வப்போது பெற்றுக் கொண்டு உடல் ரீதியான ஆரோக்கியத்தை பாதுகாக்க தினசரி முயற்சி செய்கின்றோம். எமது உடலில் இருந்து நாளாந்தம் கழிவுகள் வெளியேறாவிட்டால் எமது உடல் இயங்க முடியாது மறுபுறத்தில் ஆரோக்கியம் என்பது ஒரு சவால் மிக்கதானதாக மாறிவிடும். அதைப் போன்று தான் எமது மனதிலுள்ள கழிவுகள் (அழுக்குகள்) எம்மைச் சுற்றி பல கோணங்களில் காணப்பட்டால் எமது உள்ளம் மன விரக்தியின் அடையாளச் சின்னமாகத் திகழும். (உ+ம்) கோபம், அச்சம், மனச் சோர்வு, அழுகை, பிடிவாதம்,புலக்காட்சியின் மீது நம்பிக்கை, ஆன்மீக வறுமை. இத்தகைய அகக் காரணிகள் எமது உள்ளத்திலிருந்து வெளியேறாமல் தேங்கிக் கிடக்கின்றன. எனவே அவை எமது வாழ்க்கையில் மன அழுத்தங்களுக்கான(depression) மூலதனமாக உருவெடுத்து வாழ்நாள் முழுவதும் உள ஆரோக்கியத்தினை சவாலுக்கு உட்படுத்தி விடும்.
அவ்வாறு தான், சமூகம் பற்றிய பிழையான அபிப்பிராயங்கள், வருமானத்திற்கு அதிகமான ஆசைகள், மற்றையவர்களின் குறைகளை ஆராய்ந்து அவர்களை கேலி செய்தல் போன்ற புறக் காரணிகளும் உள ஆரோக்கியத்திற்கு சவாலாக அமையும்.
எனவே இறைவன் திருக்குர்ஆனில் "அல்லாஹ்வை நினைவு கூறுவதைக் கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன"(அல்குர்ஆன் 13:28) என்கிறான்.
மேலும் நபி (ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள், "உங்களுக்கு கீழ் உள்ளவர்களைப் பாருங்கள்; உங்களுக்கு மேல் உள்ளவர்களை பார்க்காதீர்கள்; அது அல்லாஹுத்தஆலா உங்களுக்கு சொரிந்துள்ள அருள்களை குறை மதிப்பீடு செய்யாமலிருக்க வழி சமைக்கும். (புகாரி, முஸ்லிம்)
உலக சுகாதார அமைப்பில் உலக மனநல அமைப்பின் சார்பாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல ஆரோக்கிய தினமாக கடைப்பிடித்து வருகின்றது.
இந்த தினம் கடந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டு அனுஷ்டிக்கப்படுகின்றது. அதன்படி அனைவருக்கும் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உலகளாவிய ரீதியில் முன்னுரிமையாக ஆக்குங்கள் என்பதனை 2022 அக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினக் கருப்பொருளாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தற்காலத்தில் மன ஆரோக்கியத்திற்கு பல விடயங்கள் சவாலாக மாறியுள்ளன.
ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் தொற்று நோய்க்கு முன்னர் உலகளவில் எட்டு பேரில் ஒருவர் மனநலக் கோளாறுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு தீர்வாக மனநல வைத்தியர், உளவியலாளர், நம்பிக்கைக்குரிய நண்பர், குடும்ப உறவினர் போன்றவர்களை தேவை ஏற்படும் பட்சத்தில் சந்தித்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுக் கொள்ளல், நல்ல பயனுள்ள புத்தகங்களை வாசித்தல், நண்பர்கள், அயலவர்கள், குடும்ப உறவினர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்தல், எமக்குள் காணப்படுகின்ற பிரச்சினையை ஒரு கடதாசியில் எழுதி அவற்றை கிழித்தெறிதல்.(இது ஒரு செயற்பாட்டு ரீதியான யுக்தியாகும்). எமது சிந்தனையை தவறான முறையில் சிதறடிக்காத வழிகளை முகாமைத்துவம் செய்து செயற்படுவது எமது உள ஆரோக்கியத்திற்கு உந்து சக்தியாக அமையும்.
கடந்த காலங்களில் கொவிட் 19 தொற்று போன்ற பல சவால்களை கடந்து இவ்வருடம் 2022ம் ஆண்டு உலக மனநல தினத்தின் மூலம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் நமது மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நமது முயற்சிகளை மீண்டும் தூண்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என உறுதியாக நம்பிக்கை கொள்கிறேன்.
எம்.ஜ.எம். நவாஸ் (ஸலாமி)Jp
மனித உரிமை ஆர்வலர்

0 comments :
Post a Comment