சாய்ந்தமருது சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் றியாத் ஏ.மஜீத்தின் எண்ணக்கருவில் உருவான "மகிழ்ச்சியாக இருப்போம், மகிழ்ச்சியாக பணியாற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனடிப்டையில் சமுர்த்தி மகா சங்க சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீனின் பிறந்த தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா தலைமையில் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் இசட். ஏ. ரகுமான் மற்றும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஏ.கபூர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு அல்-அமீன் முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் ஒரு வாரத்திற்கான போஷாக்கு உணவுக்கு நிதி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சமுர்த்தி சமூக அபிவிருத்தி விடய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபரிடம் கையளித்தார்.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீனுக்கு சக உத்தியோகத்தர்களால் வாழ்த்து கூறப்பட்டு அன்பளிப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
விசேடமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீனின் நிழற்படம் சமுர்த்தி மகா சங்க கணனி உதவியாளர் (பயிற்சி) எஸ்.சாபித் அக்மல் கைப்பட வரைந்து வழங்கி வைத்தார்.
மகிழ்ச்சியாக இருப்போம், மகிழ்ச்சியாக பணியாற்றுவோம்" நிகழ்வானது உத்தியோகத்தர்களுக்கிடையில் பரஸ்பரம், புரிந்துணர்வு, மகிழ்ச்சியாக பணியாற்றும் சூழலுடன் மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் இதன்போது குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான யூ.கே.சிறாஜ், கே.ஆதம்பாவா, சாய்ந்தமருது பிரதேச கணக்காய்வு பிரிவின் உள்ளக கணக்காய்வாளர் களான எஸ்.எல்.ரஹீம், ஏ.எம்.இர்ஷாத், எம்.வி.சியாம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஏ.எஸ்.நஸீறா, எம்.ஐ.சுல்பியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு சாய்ந்தமருது சமுர்த்தி மகா சங்கம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச உள்ளக கணக்காய்வு பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment