மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இஸாரா புரூட் சொப் அனுசரனையில் 16 அணிகள் பங்கு கொண்ட மின்னொளியிலான கடற்கரை உதைபந் தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி புதன்கிழமை இரவு இடம்பெற்றது.
இவ் இறுதிப் போட்டியில் டில்கோ உதைபந்தாட்ட அணியினரை எதிர்த்து டொப் உதைபந்தாட்ட அணியினர் விளையாடினர் இரு அணியினரும் எவ்விதமான கோலையும் பெறாததால் தண்டனை உதைமூலம் டில்கோ அணியினர் வெற்றி பெற்றனர்.
இப்போட்டிக்கு பிரதம அதிதிகளில் ஒருவராக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தையும் விசேட பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தார்
0 comments :
Post a Comment