உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று முன்பள்ளி பாடசாலை ஏற்பாடு செய்த சிறுவர் தின ஊர்வலமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலை நிர்வாகத்தின் தலைமையில் மிக சிறப்பாக இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவரும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளத்தின் தலைவருமான அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறுவர் தின பரிசாக சிறார்களுக்கு இனிப்பு வழங்கியதுடன் மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
அத்துடன் தனது உரையில் மாணவர்களுக்கு முன்பள்ளி பாடசாலையின் அவசியம் பற்றியும், சிறுவர்களின் உளவியல் பிரச்சினைகளை கையாளுவது தொடர்பிலும் பொற்றோர்களுக்கு விளக்கமளித்தார்
0 comments :
Post a Comment