மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது முறையா? முப்பெரும் விழாவில் வலயக்கல்விப் பணிப்பாளர் அமீர் கேள்வி.


காரை சகா-
மகாலத்தில் மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுகின்றனர் . இது முறையா என்ற கேள்வி எழுகின்றது. சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று எம்மிடம் இருக்கின்ற ஆற்றல்களை திறமைகளை ஆசிரியர்கள் வெளிக் கொணர வேண்டும்.அதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய முப்பெரும் விழாவில் உரையாற்றிய சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம் அமீர் தெரிவித்தார்.

அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலய முப்பெரும் விழா நேற்று வித்தியாலய அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றபோது பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிரியர் தின விழா சிறுவர் தின விழா ,முதியோர் தின விழா ஆகிய மூன்று விழாக்களையும் இணைத்து முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவில், பிரதிக் கல்வி பணிப்பாளர்களான திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார், பி.எம்.யசீர் அரபாத் ,உதவி கல்வி பணிப்பாளர்களான வீ.ரீ. சகாதேவராஜா, எச்.நைரூஸ்கான் மற்றும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

அங்கு சிறப்பம்சமாக கொழும்பிலிருந்து வந்த ஹரி என்பவரின் மாயாஜால வித்தை சிறுவர்களை பெரிதும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.




விழாவில் பணிப்பாளர் அமீர் மேலும் கூறியதாவது ..


பெரிய பெரிய பாடசாலைகளிலே பரீட்சை வைத்து 90 அல்லது 100 புள்ளிகளை பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் வழங்குகிறார்கள். இது சரியா? இதுவும் இன்று கேள்வியாகிறது. உண்மையிலேயே படிக்காதவர்களை படிக்க வைக்கும் இடம் தான் பாடசாலை என்பதை நாங்கள் மறந்து விட முடியாது. நோயில்லாதவருக்குத்தான் வைத்தியம் பார்ப்பேன் என்று ஒரு வைத்தியர் கூற முடியாது .எனவே நாங்கள் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் .


இப் பாடசாலை அதிபர் பொன்.பாரதிதாசன் இந்த சமூகத்தை உள்வாங்கி இருக்கின்றார். இதுதான் அவரது வெற்றி .


சிறுவர்கள் உரிமைகளை மட்டும் பேசாது எமது கடமைகளையும் பேச வேண்டும் .இன்றைய இளைஞர் மத்தியில் போதைப்பொருள் பாவனை ஆபாச சிந்தனைகள் மோசமாக பீடித்துக் கொண்டிருக்கின்றது. இவை பாடசாலை மாணவர்களிடத்திலும் பரவ ஆரம்பித்திருக்கின்றது. எனவே பெற்றோர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இதில் முக்கிய கவனம் எடுக்க வேண்டும் என்றார்.


பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். பாடசாலைக்கு உதவி செய்தவர்கள் கல்வி சமுகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.


பாடசாலையில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களை அன்னமலை தனவந்தர்கள் அன்பளிப்பு செய்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :