சமகால பொருளாதார நெருக்கடி தீர்வாக அரசினால் முன்வைக்கப்பட்ட துரித உணவு உற்பத்தி திட்டம் தீவிரமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் நிந்தவூர் விவசாய போதனாசிரியர் பிரிவில் வீட்டு தோட்டத்தில் பயிரிடப்படும் தானிய பயிர்களான சோளன் பயறு கௌபி நிலக்கடலை குரக்கன் போன்ற விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு நிந்தவூர் விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்றது.
தொழில்நுட்ப உதவியாளர் எம் எம் ஏ நவாத் நெறிப்படுத்திய இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று வலய உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் வலய பாடவிதான உத்தியோகத்தர் எம். கோகுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டன.
மேலும் தானிய பயிர்களின் நடுகைமுறை பசளையிடல் நோய் பீடை பரிபாலனம் அறுவடை முறை பற்றி விவசாய போதனாசிரியரால் பூரண விளக்கம் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment