வெற்றி மலர் வௌயீடு, மாவட்ட செயலக கீதம் அறிமுகம்,ஆகிய நிகழ்வுகள் மிகவும் விமர்சையாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.இந்நிகழ்வுகளில், பல்துறைசார் சர்வதேச, தேசிய ,மாகாண ,மாவட்ட , சாதனையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கௌரவ சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட், கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், இராஜங்க அமைச்சர்களான எஸ் வியாழேந்திரன், எஸ் சந்திரகாந்தன், மற்றும் கௌரவ அதிதிகள், விஷேட அதிதிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கௌரவ அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் அவசர வெளிநாட்டு பயணமொன்றின் காரணமாக கலந்து கொள்ளாத நிலையில் கௌரவ அமைச்சரின் வாழ்த்துச் செய்தியை இணைப்புச் செயலாளர் அ. அப்துல் நாசர் அவர்களினால் வாசிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment