கல்முனை மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளரை சந்தித்த ஹரீஸ் எம்.பி.



நூருள் ஹுதா உமர்-
ல்முனை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து கடந்த 26.09.2022ம் திகதியன்று மாலை படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்ற மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். தகவல் அறிந்த தினத்திலிருந்து அம்மீனவர்களை பாதுகாப்பாக மீட்க பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பல்வேறு முயற்சிகளை உயர்மட்டங்களில் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் அம்மீனவர்களின் படகு மாத்தறை தெய்வேந்திரமுனை பகுதியில் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்பிடி அமைச்சு என்பன இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றது.

இன்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து இது தொடர்பிலான தற்போதைய அவசர நிலைகளை விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உடனடியாக தேடுதல் பணியை கூட்ட ஆவண செய்யுமாறு அவரை கேட்டுக்கொண்டார்.
இதனடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படை தளபதிக்கு உத்தரவை பிறப்பித்த ஜனாதிபதியின் செயலாளர் விசை கூடிய இயந்திர படகுகளை கொண்டு அவசரமாக அம்மீனவர்களை பாதுகாப்பாக மீட்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும், கடற்படை துரித கெதியில் இயங்கி மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விடுமுறை தினமாக இருந்தாலும் கூட அவசர நிலையை கவனத்தில் கொண்டு இன்று அலுவலகத்திற்கு வந்து இந்த பணியை முன்னெடுத்த ஜனாதிபதி செயலாளருக்கு ம், சலிக்காமல் தேடுதல் பணியை முன்னெடுத்து வரும் கடற்படையினருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். மேலும் விரைவில் அவர்களை கரைக்கு அழைத்துவரப்படும் என்று நம்பிக்கையும் வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :