வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அல்-அமீன் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு இவ்வார ஆரம்பத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி உத்திேயோத்தர் யூ.எல்.ஜஃபர் நெறிப்படுத்தலில் சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவ ஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு, சமுர்த்தி முகாமைத்துவப் பாணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஏ.கபூர், திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக், வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நெளஷாட், உதவி முகாமையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.றியாத், சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.ரம்ஸா, சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசால், கணனி உதவியாளர் (பயிற்சி) எஸ். சாபித் அக்மல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்திற்கான நிதி உதவியினை சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment