கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவாகி பாடசாலை வரலாற்றுச் சாதனை!



எம்.என்.எம்.அப்ராஸ்-
திருகோணமலை - கந்தளாய் லீலாரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில்
நேற்று(06) நடைபெற்ற 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பரிதிவட்டம் வீசும் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் தரம்-10 இல் கல்வி பயிலும் எம்.எச்.எம்.அல் கிபத் எனும் மாணவன் 36.74m தூரம் எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ் வெற்றியானது கல்முனை அல் மிஸ்பாஹ் பாடசாலை வரலாற்றில் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் தனி நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இம் மாணவனை பயிற்றுவித்து வழிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.ஜே.எம்.சஸான், எஸ்.எம்.புஹாரி, எஸ்.எப்.பவுசியா அவர்களுக்கும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஜே.எம் சாபித், எம்.ஜே.முபீத் அவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துர் ரசாக்,பிரதி அதிபர் ஐ.எல்.எம்.ஜின்னா,உதவி அதிபர் இ.றினோஸ் ஹஜ்மீன் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :