ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம்(BUDS. UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH. UK)என்பவற்றின் நிதிப்பங்களிப்பில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 'நவபோச' சத்துமா வழங்கும் நிகழ்வு இன்று(28.10.2022) வெள்ளிக்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில்
இடம்பெற்றது.
இவ் வைபவம் கல்முனை ஆதாரவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை ஆதாரவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ந.ரமேஸ். உதவி வைத்திய அத்தியட்சகர் டாக்டர்ஜெ.மதன், குழந்தை
நல மருத்துவ நிபுணர் டாக்டர் பிறேமினி மற்றும் நிதிப்பங்களிப்பு வழங்கிய அமைப்புக்களின் பிரதிநிதி கிறிஸ்ரி என்பவர்கள் கலந்து கொண்டனர்.
கல்முனை பிராந்திய தாய்மார்களுக்கான சத்துமா பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.. இந் நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர்
இரா.முரளீஸ்வரன் உரையாற்றுகையில்.
இவ்உதவியை வழங்கிய அமைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு கொரொனா காலங்களிலும் இந்த அமைப்பு பல உதவிகளை வழங்கியதை
நினைவு கூர்ந்தார்ந்தார்..
0 comments :
Post a Comment