காரைதீவு கல்விக்கோட்ட மாளிகைக்காடு கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் சாத்தியப்பிரமாணமும் இன்று திங்கட்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒழுக்காற்று பிரிவுக்கு பொறுப்பான ஏ.எம். இர்ஷாத் இந் நெறிப்படுத்தலில் மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கு சத்தியப்பிரமாணம் சிரேஷ்ட மாணவ தலைவர் எம்.எம். ஆஸில் அஹமட் செய்து வைக்க, பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்களினால் மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைக்கப்பட்டது.
மாணவ தலைவர்களின் பொறுப்புக்கள், கடமைகள் தொடர்பிலும் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள், கல்வி மற்றும் கல்விசாரா நடவடிக்கைகளின் போது மாணவர்கள் நடந்துகொள்ளவேண்டிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பிலும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி இங்கு விளக்கமளித்தார்.
0 comments :
Post a Comment