காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண்களா பாடசாலையில் சர்வதேச ஆசிரியர் தினம் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.ரவீந்திரன் தலைமையில் நேற்று கோலாகலமாக இடம்பெற்றது .
பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியிலே கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்கள் தவிசாளரினால் கௌரவிக்கப்பட்டனர்.
11ஆம் வகுப்பு மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து தவிசாளருடைய தூரநோக்கான செயற்பாடு காரைதீவு மண்ணினுடைய கல்வி வளர்ச்சிக்காக உதவுதல் என்கின்ற தொனிப்பொருளில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கௌரவிக்கப்பட்டார்.
இதன் போது பாடசாலை துறை சார் அதிகாரிகள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment