சேவைக் கால பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


நூருல் ஹுதா உமர்-
றக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால பயிற்சிநெறி பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாடின் நெறிப்படுத்தலில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் புதன் கிழமை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீஷன் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் ஏம்.ஏ.சி.அஹமட் நஸீல், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எம். தஸ்லிம், நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜமீல், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர் திருமதி. டப்யூ. சுரஞ்சி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம். கரீமா, வி. ரஜீவன், சிரேஷ்ட அபிவித்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி எஸ். சபறுல் ஹஸீனா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி எஸ். றிஸ்மியா ஜஹான், அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம். இர்பான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் விஷேட அம்சமாக பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த முன்பள்ளிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு, அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் முன்பள்ளிப் பாடசாலை ஆசிரியர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினதும், தேசிய கல்வி நிறுவகத்தினதும் பங்குபற்றுதலுடன் வடிவமைக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் அறிவு மற்றும் திறன் வாண்மைத்துவத்தை விருத்தி செய்யும்நோக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக் கால பயிற்சிநெறியின் உள்ளடக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப் பயிற்சி நெறியானது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் உலக வங்கியின் அனுசரணையில் இப் பயிற்சிநெறி நடாத்தப்படுகின்றது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :