இனமத, மொழி பாகுபாடின்றி உதவிக்கரம் நீட்டும் காப்போம் தொண்டு நிறுவனம்!



பைஷல் இஸ்மாயில், மட்டு. துஷாரா -
திருகோணமலை - அலஸ்த்தோட்ட செயின்ட் யோசப் முதியோர் இல்லத்திலுள்ளவர்களுக்கு புதிய ஆடைகளை இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

செயின்ட் யோசப் முதியோர் இல்லத்தின் பொறுப்பதிகாரி அருட் சகோதரி லூசினா தலைமையில் நேற்று (26) முதியோர் இல்ல கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் மற்றும் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு இனமத, மொழி பாகுபாடின்றி தனது உதவிகளை மனிதாபிமான ரீதியில் இந்நிறுவனம் வழங்கி வருகின்றது.
காப்போம் தொண்டு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கான நிதியினை (திருமதி) பத்மா குணதாசன் (லண்டன்) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதும், இந்நிகழ்வில் முதியவர்களை மகிழ்விப்பதற்காக கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :