சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
லக பார்வை தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் .ஏ.ஆர்.எம் தெளபீக்,கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம் றிபாஸ்,சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா,ஆகியோரின் வழிகாட்டலின் கீழ்,

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை பிராந்தியத்தில் தேவையுள்ள மூவினத்தையும் சேர்ந்த சுமார் 100 பயனாளிகளுக்கு நேற்று (30) கண்புரை (Cataract) சத்திரசிகிச்சை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கம்பஹா வைத்தியசாலையை சேர்ந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர். ஜே.டி. டயஸ், வைத்தியர். அசேல அபேதீர மற்றும் வைத்தியர். அஹமட் ஜெசா குழுவினருடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர். ஏ.ஆர். நியாஸ் அஹமட், கண் வைத்தியஉத்தியோகத்தர் வைத்தியர். அல் ஆமீன் றிசாத் மற்றும் வைத்தியர்கள், விஷேட தாதிய உத்தியோகத்தர்கள், விடுதி முகாமையாளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பு மிக்க சேவை பாராட்டத்தக்கது.

இன் நிகழ்வுக்கு Assist RR நிறுவனம், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, சம்மாந்துறை லயன்ஸ் கழகம், SWDC போன்ற அமைப்புக்கள் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :