கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த. நற்பிட்டிமுனை வீரர்களுக்கு பாராட்டு !!



நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்-
கிழக்கு மாகாண விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து தேசிய போட்டிக்கு தெரிவான நற்பிட்டிமுனை வீரர்கள் இருவருக்கு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் ஏற்பாட்டில்  (16) சாதனையாளர் பாராட்டு நிகழ்வு சவளக்கடையில் நடைபெற்றது.

அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சீ.எம். ஹலீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பரிதி வட்டம் வீசும் போட்டியில் வெளிப்பதக்கம் வென்ற அமீருன் பாத்திமா அஸ்தாவுக்கு "சாதனை மங்கை" விருதும், நீளம் பாய்தல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்ற ஜபாஹிர் முகம்மட் முஆத்திற்கு "சாதனை வீரன்" விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களைப். பாராட்டி உரையாற்றினார். தனது உரையில் மேலும் இப்போதைய கல்வி முறையில் மாற்றம் வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அது காலத்தின் தேவையாக உள்ளது என்றார். அத்துடன் கல்விக்கு மேலதிகமாக விளையாட்டும், ஏனைய திறமைகளும் முழு மனிதனாக மாற்றும் தன்மை கொண்டது என்றார்.

நிகழ்வில் வீரத்திடல் கமு/ சது/அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஏ. முனாஷிர், நற்பிட்டிமுனை கமு/கமு/அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய உதவி அதிபர் மௌலவி ஏ. சாலித்தீன் அமைப்பின் செயலாளர் யூ. எல். எம். பாயிஸ், அமைப்பின் பொருளாளரும், கல்முனை மாநகர சபை சுகாதரப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியுமான ஊடகவியலாளர் யூ. எம். இஸ்ஹாக் உட்பட வீரர்களின் பெற்றோர் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :