கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் ஏ.ஆர்.ஏ.அய்மன் குண்டெறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.
18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் குறித்த மாணவன் 12.79 மீற்றர் தூரம் குண்டெறிந்து இரண்டாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவன் அய்மனுக்கும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் ஆர்.அலோஜிதன், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு பிரதீப் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment