மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரியின் மாணவர் சந்தை




ருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரியின் முன் பாடசாலையில் மாணவர் சந்தை நேற்று முன்தினம் 24/10/2022 திங்கட்கிழமை பாடசாலை முன்றலில் வெகுவிமர்சையாக நிகழ்த்தப்பட்டது.

பெற்றோர்கள் சார்பாக இறக்காமம் பிரதேச சபை செயலாளர் MSM. றஸ்ஸான், வைத்தியர்கள் J. ஹைலுல் மஸாஹித் மற்றும் MIM. நௌஸாத், கணக்காளர் M.றியாஸ், தொழிலதிபர் MHM. தாஜுத்தீன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் YK. றஹ்மான் மற்றும் CHILD FIRST தலைவர் கலாநிதி AMM. நவாஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு காலை 8 - 12 மணி வரை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.

பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து ஏறத்தாள 40 கடைகளை நடத்தினர்.

நிகழ்வின் போது மாணவர்கள் சமூகத்தினருடனான தொடர்பாடல், பணப்பரிமாற்றம், புதிய பொருட்களை அடையாளம் காணல், பொருட்களை விற்றல் - வாங்கல், சந்தை பற்றிய அறிமுகம் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
மேலும் மரக்கறிகடைகள், இனிப்புப் பண்ட கடைகள், பூ மரக்கடைகள், பழக்கடைகள், சில்லறைக் கடைகள், இளநீர் கடைகள், குளிர்பானக்கடைகள், காலையுணவு சாப்பாட்டுக் கடைகள், BBQ கடைகள், தேனீர் கடை, Fancy கடைகள், துணிக்கடைகள், Baby Shop போன்ற எல்லா வகையான கடைகளும் வைக்கப்பட்டன.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :