இந்த நெருக்கடியானது ஒரு சிறு குழுவினரால் உருவாக்கப்பட்டதே தவிர விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டால் உருவாக்கப்பட்டதல்ல என்பது என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் வெற்றிபெற முடியாத மிகச்சிறிய குழு இலங்கை கால்பந்தாட்டத்தை அழிக்க சதி செய்கிறது என்பதை முழு நாடும் இப்போது உணர்ந்துள்ளது. இந்தக் சிறிய குழுவுக்குப் பின்னால் கால்பந்தாட்ட முன்னாள் பலமான நபர் இருப்பது உலகம் முழுவதற்கும் தெரியவந்துள்ளது.
ஜஸ்வர் உமரின் கோரிக்கைக்கு அமைய இலங்கை கால்பந்து மீதான தடையை தாமதப்படுத்துவதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சருடன் பேசி இந்த நெருக்கடியை தலையிட்டு தீர்த்து வைப்பதாக FIFA தலைவரிடம் ஜஸ்வர் உமர் உறுதியளித்துள்ளார்.
52 லீக்குகள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் 9 லீக்குகள் மட்டுமே எதிர் அணியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜஸ்வருடன் இணைந்துள்ள 52 லீக்குகளும் இலங்கையை சர்வதேச தடையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்ட ரீதியிலான நிவாரணம் கோரி உள்ளன. 2/3 பெரும்பான்மையான லீக்குகள் இடையீட்டுத் தரப்பாக இந்த வழக்கில் தலையிட்டு, முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு கோரி உள்ளன.
விரைவில் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்க தனது தரப்பு ஆவலுடன் இருப்பதாக. ஜஸ்வர் உமர் தெரிவித்தார் .
0 comments :
Post a Comment