மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் 1998ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒன்றிணைந்து மெஸ்டோ((meesdo)என்ற பெயரில் அமைப்பொன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளனர்.இந்த அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த சனிக்கிழமை(15-10-2022)இரவு மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை பெண்கள் பிரிவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
எதிர்காலத்தில் கல்வி,பொருளாதாரம்,சமூக சேவை,அபிவிருத்தி,உள்ளிட்ட பல பணிகளை முன்னெடுக்க இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.இதன் அடிப்படையில் இந்த அமைப்பை முன்னெடுப்பதற்கு பின்வருவோர் நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் என்.ஜி.நாபியு.செயலாளர் பி.பஹத்ஸமான்,பொருளாளர் ஏ.எம்.றிஸா அஹமட்,உப தலைவர் ஜே.எம்.பாசில்,உப செயலாளர் யூ.எம்.முஜீப்,கணக்காய்வாளர் எம்.எஸ்.நிஹால் முகம்மட், ஊடக இணைப்பாளர் இஸட்.எம்.மின்ஹாஜ் ஆகியோர் தெரிவுசெய்யப்ட்டனர்.
மேலும் நிருவாக சபை உருப்பினர்களாக எஸ்.சுதர்சன்,எ.எம்.எம்.பஸீல், ஏ.எல்.எம்.உஸாமா,எம்.ஐ.இஸ்முடீன்,இஸட்.றியாஸ் முனீர்,என்.றியாசத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment