கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆண் ஆசிரியர்கள் இடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் எம்.எல்.சீ.கே. ரொக்கெட் அணியினர் (MLCK Rocket )04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றனர் .
எம்.எல்.சீ.கே.ரொக்கெட் (MLCKRocket ) அணிக்கும் ,எம்.எல்.சீ.கே றோயல் (MLCK Royal)அணிக்குமிடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அணிக்கு 08 பேர் கொண்ட 06 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியானது கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய எம்.எல்.சீ.கே றோயல் அணியினர் (MLCK Royal) 06 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 69 ஓட்டங்களை பெற்றனர்.
எம்.எல்.சீ.கே றோயல் அணி (MLCK Royal)சார்பில் நாசர் அதிகூடிய (20)ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம்.எல்.சீ.கே ரொக்கெட் அணியினர் (MLCK Rocket)6.2ஓவரில் 4 விக்கெட் இழந்து 70 ஓட்டங்களை பெற்று போட்டியில் 4 விக்கெட்டுக்களால் வெற்றியடைந்தனர்.
எம்.எல்.சீ.கே ராக்கெட் அணி (MLCK Rocket)சார்பில் முஸ்தபா முபாறக் அதி கூடிய (30) ஓட்டத்தினை பெற்றுக்கொடுத்தார்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வெற்றி பெற்ற எம்.எல்.சீ.கே ரொக்கெட் அணியின் MLCK Rocket) முஸ்தபா முபாறக் தெரிவு செய்யப்பட்டார்.
எம்.எல்.சீ.கே ரொக்கெட் (MLCK Rocket) அணித் தலைவராக குடியியற் கல்வி பாட ஆசிரியர் எம்.ஏ.அஸ்வர்,எம்.எல்.சீ.கே றோயல் (MLCK Royal )அணித் தலைவராக கணிதப்பாட ஆசிரியர் எம்.ஜ. நாசர் ஆகியோர் தலைமை தாங்கினர்
போட்டியின் நடுவர்களாக அலியார் றிபான், எ.எல். நளீம் ஆகியோர் கடமையாற்றினர்.
இதன் போது பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
மேலும் இதில் நிர்வாகத்துக்கான பிரதிக் கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.அப்துல் றஹீம்,கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். சம் சம் பிரதி அதிபர்களான எஸ்.எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஆர்.எம்.அஸ்மி காரியப்பர்,உதவி அதிபர்கள்,ஆசியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment