வாழ்வில் பட்டம், பதவி, வசதி வந்ததும் சிரிப்பை அடக்கி வாசித்து,
நட்பு வட்டங்களை குறைத்து, சக மனிதர்களுடன் கதைப்பதை குறைத்து,
ஸலாம் கூறுவதை குறைத்து, சக மனிதர்களை கண்டால் தூர நகர்ந்து,
இவ்வாறு பல குணாதிசயங்களை கொண்ட உள்ளங்களுள், இன்று இறையடி சேர்ந்த நண்பன் லூலூ றியாழ் மாற்றமான குணத்தை கொண்டவர். நண்பர்களை கண்டால் முந்திக் கொண்டு ஸலாம் கூறி இல்லாது விட்டால் சமிக்ஞையாவது தந்து விட்டுச் செல்லும் குணம் கொண்டவர். அனைவருடனும் அன்று போல் மரணம் வரை ஒரே குணத்தில் வாழ்ந்து விட்டுச் சென்று விட்டார்.
எமக்கே இவ்வாறு என்றால் ஒரே ஒரு சகோதரனை கொண்ட அவரது உடன் பிறப்புகளின் வேதனையை கட்டுப்படுத்தும் மன தைரியத்தை கொடுப்பானாக.
புகுந்த வீட்டிலும் இரட்டிப்பு பாசத்தை வைத்து வாழ்ந்த அந்த நண்பன் இன்று எம் மத்தியில் இல்லை. அன்னாரின் மறுமை வாழ்வில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர் சுவர்க்கம் கிடைக்கவும், அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் அடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்/றோம்
0 comments :
Post a Comment