கல்முனை சாஹிரா கல்லூரி கிழக்கு மாகாணமட்ட Relay Champion பட்டத்துடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.



நூருல் ஹுதா உமர்-
ம் மாதம் 5ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 × 100M அஞ்சலோட்டத்தில் முதலாமிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 × 100M அஞ்சலோட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 × 400M அஞ்சலோட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் வென்று கிழக்கு மாகாண Relay Champion ஆக கல்முனை சாஹிரா கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது .

அத்துடன் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110M தடைதான்டல் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400M தடைதான்டல் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் சுவிகரித்துள்ளார்கள். இம் மாணவர்கள் இன்னும் பல பயிற்சிகளை மேற்கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியில் நடைபெறவுள்ள போட்டிகளில் முதலாமிடத்தை பெற்று பாடசாலைக்கும், கிழக்கு மண்ணுக்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :