மத ரீதியான கேவலமான அரசியல் நடத்தும் போக்கை அரசாங்கம் கைவிட வேண்டு காரைதீவு பிரதேச சபை SLMC உறுப்பினர் இஸ்மாயில் காட்டம்.



வி.ரி. சகாதேவராஜா-
னவாதத்தை தூண்டி இனங்களை பிரித்து அரசியல் நடத்தும் ஒருவித கபடத்தனமான போக்கை இலங்கை அரசுகள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. இவ்வாறு மதரீதியாக கேவலமான அரசியல் நடத்துகின்ற போக்கை அரசாங்கம் கைவிட வேண்டும் .

இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம் எச் எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

திருகோணமலை ஆலய விவகாரம் தொடர்பாக நேற்று தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் விசேட அமர்வு நடைபெற்றது. அதன் போது உறுப்பினர் இஸ்மாயில் மேலும் தெரிவிக்கையில்.

இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி கபடத்தனமான அரசியலை இன்னும் தொடரக்கூடாது. பேரினவாத அரசுகள் அவ்வப்போது செய்த சூழ்ச்சி தான் இன்று இனங்கள் பிரிந்து நிற்பதற்கு காரணம்.முன்னாள் ஜனாதிபதி முதலாவது பதவியேற்பின் பொழுது இனவாதத்தை மையமாக வைத்து இனவாதத்தை தூண்டி அரசியல் நடத்தினார். அதன் காரணமாக அவர் வரலாற்றில் இல்லாத படி தூக்கி வீசப்பட்டார். கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மாயக்கல்லிமலை அட்டாளைச்சேனை போன்ற இடங்களிலே புத்தர் சிலைகளை வைத்து அவமதித்தார்கள் .இன்று மீண்டும் தமிழ் மக்கள் மீது இப்படியான செயல்களை செய்து சீண்டி வருகிறார்கள். இவ்வாறான போக்கை உடனடியாக அரசாங்கம் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுயேச்சை குழு உறுப்பினர் எஸ். சசிக்குமார் பேசுகையில் ..

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் பூர்வீகத்தை இலக்கு வைத்து இன்று திருகோணமலையில் இந்த அடக்கு முறையை மேற்கொள்கிறார்கள். 5 ஈச்சரங்கள் கிறிஸ்துவுக்கு முன் ஏழாம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றிருந்தன .அந்த வரலாற்றை குழி தோண்டி புதைக்கின்ற செயற்பாடுகளாக இந்த செயற்பாடுகளை காண்கின்றோம். இதனை உடனடியாக அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :