கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடம் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில் எறிபந்து (Throwball) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டு பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டியிலும், பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டியிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் 2022யில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத்தில் முதன் முதலாக பங்குபற்றிய இக் கல்லூரியின் 17, 20 வயது பிரிவு அணிகள் 4ம் இடத்தை பெற்றுக்கொண்டது.
இம்மாதம் 8ம் 9ம் திகதிகளில் இலங்கை பாடசாலைகள் எறிபந்து சங்கத்தினால் எஹலியகொடயில் நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்து போட்டியில் 15, 20 வயது பிரிவுகளில் கலந்த கொண்டனர். விளையாட்டு அறிமுகப்படுத்தி பங்கு பற்றிய முதல் வருடத்திலேயே கல்லூரி அணி, முதல் இரண்டு சுற்றுக்களில் வெற்றி பெற்று, காலிறுதி (Quarter Final) வரை முன்னேறியுள்ளது.
0 comments :
Post a Comment