சாய்ந்தமருது Usf ஸ்ரீலங்கா அமைப்பின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கிடையில் USF Tigers, USF Fighters, USF Warriors என 3 அணிகளாக பிரிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ முக்கோண சுற்றுத் தொடர் அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.எஸ். இர்சாத் தலைமையில் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் USF Fighters, USF Warriors ஆகிய இரு அணியில் கலந்து கொண்டனர் 8 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் முதலில் USF Warriors துடுப்படுத்தாடி 72 ஒட்டங்களை வெற்றி இலக்காக
நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பத்தாடிய USF Fighters அணி 6.5 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 41 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது 31 ஓட்டத்தால் USF Warriors அணி வெற்றி பெற்று சம்பியனானது
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.சரிபுதீன், சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம். இலாஹி, USF ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கபூர் அன்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற அணிக்கு கிண்ணமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment