பொத்துவில் சின்னவட்டவயல் 102 வருட கால தனியார் உறுதி பூமியாகும்!



எமது ஆலயம் கடந்த 84 வருடங்களாக அதனை பராமரித்து வருகிறது!
உகந்தமலை முருகன் ஆலய வண்ணக்கர் சுதா தெரிவிப்பு.
வி.ரி.சகாதேவராஜா-

ட்டக்களப்பு பொத்துவில் பிரதான வீதியில் உள்ள பொத்துவில் சின்ன வட்டிவயல் 17 ஏக்கர் காணி கடந்த 120 வருட காலமாக தனியாரின் உறுதிப் பூமியாக இருந்து வந்தது . அந்த பூமியில் 3 ஏக்கர் காணி 1938 இல் எமது ஆலயத்திற்கு கிரயமாக வழங்கப்பட்டது. அதனை கடந்த 84 வருடங்களாக எமது பரம்பரையினர் பராமரித்து வருகின்றோம்..

இவ்வாறு வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.

பொத்துவில் சின்னவட்டிவயலில்உள்ள உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய காணியை அபகரிக்கும் நோக்கில் நாளை திங்கட்கிழமை(14) சில இனவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்ற இந்த வேளையிலே அவர் இன்று(13) இந்த கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்.

1920 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தை சேர்ந்த காசிநாதர் வைத்திலிங்கம் மார்கண்டர் பராமரித்து வந்திருந்தார். அதனை மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த வள்ளியம்மை தேவநாயகம் என்பவருக்கு விற்றுக் கையளித்தார். அவர் 1938 ஆம் ஆண்டு எமது ஆலயத்திற்கு கிரயமாக அன்பளிப்பு செய்தார். எமக்கு மாத்திரம் அல்ல ஏனைய ஐந்து ஆலயங்கள் 02 பன்சலைகள் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் அன்பளிப்பு செய்தார்கள் .

நாங்கள் எமது மாமா சந்தஹாமி புஞ்சிமாத்தயா மற்றும் குமார் மாமா பின்னர் சகோதரர் லதன் அவருக்கு பின் நான் தற்சமயம் பராமரித்து வருகின்றேன். 2015 ஆம் ஆண்டில் நான் ஆலயத்தை பொறுப்பேற்றபோது பாரம்பரிய இந்த காணி ஆவணமும் எனக்கு தரப்பட்டது.

அன்று இந்து கலாச்சார அமைச்சராக இருந்து டிஎம் சுவாமிநாதன் அவர்களைக் கொண்டு கதிர்காம பாதயாத்திரை செல்பவர்களுக்கான தங்குமிடம் ஒன்றை அமைக்க அடிக்கல் நட்டோம்.
எது அப்படி இருப்பினும் கடந்த 84 வருட காலமாக நாங்கள் தான் இதனை பராமரித்து வருகின்றோம். இது அரச காணியோ அல்லது வேறோருவரின் காணியோ அல்ல என்பதனை தெரிவிக்கின்றேன். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :