சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான அரபிக் நூல் (கிதாப்)கள் அரபிக் கலாபீடத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.


ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் தாமரைக் கேணியில் அமைந்துள்ள நிழாமிய்யா அறபிக்கலாபீடத்தில் பயின்று வருகின்ற உலமா மாணவர்களின் ஷரீஆ கற்கைகளுக்கு தேவையான சுமார் பதினொரு இலட்சம் ரூபாய் பெறுமதியான அனைத்து வகையான கிதாபுகளும் எமது ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றிய (ESDA) அமைப்பினால் இன்று அக் கலாபீட ஒன்றுகூடல் மண்டபத்தில் கல்லூரி மௌலவி AA.அஹமது பஷீர் ( ரப்பானி) மற்றும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வு கலாபீட மாணவர்களின் இனிமையான கஸீதா நிகழ்வுடன் எமது ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றிய (ESDA) அமைப்பின் தலைவர். எம் எல்.செய்யத் அஹமத் அவர்களின் தலைமையில் பிரதம அதிதி - ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிகாரா மவ்ஜூத், விசேட அதிதி - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எம். ஐ.ஏ.வஹாப்தின் அவர்கலும் கௌரவ அதிதிகளாக - இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் அனஸ் அஹமத், ஏறாவூர் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.முகைதீன் , ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அதிபர் எம் எம் மவ்ஜூத் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் ஏ.சி.நஜ்முதீன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம் ஐ எம் ஹாரிஸ், மற்றும் ஏறாவூர் முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவி ஜே எம் இப்ராஸ் காரி, மீரா கேணி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் எஸ்டா அமைப்பின் உப தலைவர் எம் எம் அஜ்வத், செயலாளர் எம் எஸ் றஸீன், அமைப்பாளர் எஸ் எம் கனீபா ஜேபி ஏனைய நிருவாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம அதிதி,விசேட அதிதி மற்றும் கலந்து கொண்ட அதிதிகள்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்


பிரதேச செயலாளர் நிகாரா மவ்ஜூத்

ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியம் ஏறாவூர் பிரதேசத்தில் பல்வேறு காத்திரமான, காலத்துக்கு பொருத்தமான முறையில் மாதாந்தம் குறைந்தது மூன்று வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக ஒன்றை செய்யாது வித்தியாசமான முறையில் செய்து வருவதை பாராட்டி வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமைப்பின் ஸ்தாபகர் எம் எச் எம் இஸ்ஸத் அவர்களது வழிகாட்டுதலை மேன்மை படுத்தி பேசியிருந்தார்.

இந் (கிதாப்) நூல்களை பெற்றுக்கொள்வதற்கு பல வழிகளிலும் உதவியாக இருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் அமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்ததுடன் இதனை கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இலவசமாக வழங்கிய தனவந்தருக்கு ஈருலகிலும் நல்ல பாக்கியம் கிடைப்பதற்கும் அவர்களது வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதற்கும் குறிப்பிடத்தக்கதாகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :