கொழும்பு 13 விவேகானந்தா கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தாக்கக் கண்காட்சி ஒன்று பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி சி. ரவிச்சந்திரிகா தலைமையில் இடம் பெற்று வருகின்றது.
மாணவர்களின் ஆக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை உள்ளடக்கியதான இக்கண்காட்சியில் மாணவர்கள் பெற்றோர்களின் நலன் கருதி கல்வி தொடர்பான சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமச்சந்திரவினால் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கண்காட்சியில் புதிய கண்டு பிடிப்புக்கள் உள்ளிட்ட பல துறைகளில் தெரிவு செய்யப்பட்டு வெற்றி பெற்ற சுமார் 50 மாணவர்களுக்கு அமைச்சரினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாளான இன்றும் பெருந்திரலான மாணவர்கள் பெற்றோர்களும் பார்வையிட வந்தமை குறிப்பிடத்தக்கது. கண்காட்சி நாளை ஞாயிற்றுக் கிழமை 6ஆம் திகதி நிறைவடைய இருக்கின்றது.
கடந்த இரண்டு வருடகாலமாக கொரோனா நோய் காரணமாகவும் அதன் பின்னர் சில காலம் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களாலும் பாடசாலைகள் சரியான முறையில் இயங்காததால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டதுடன் மாணவர்கள் மத்தியில் ஒருவகையான சோர்வு நிலைமைகளும் காணப்பட்டன. இவ்வாறான நிலையில் தற்போது பாடசாலைகள் முழுமையாக இயங்கத் தொடங்கி கற்றல் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களின் சோர்வு நிலைமைகளை போக்கி அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர்களின் அறிவுத் திறண் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமது பாடசாலையில் இம்முறை புத்தாக்கக் கண்காட்சியை நடத்துவதாகவும் இதில் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி உள்ளதுடன் கண்காட்சியை பார்வையிட ஏனைய பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பெருந்திரலானவர்கள் வருவதால் தமக்கு இது பாரிய வெற்றியான விடயம் என்றும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment