துரைவி விருது-2023



2022 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவைத் தேர்ந்தெடுக்கப்பட்டு துரைவி விருது வழங்கப்படவுள்ளது. தெரிவு செய்யப்படும் சிறந்த நூல் ஒன்றுக்கும் தலா 10000.00 ரூபாவும், விருதும், சான்றிதழும் வழங்கப்படும்.

கட்டுரைத் தொகுப்பு

கட்டுரைத் தொகுப்புக் கலை இலக்கிய விமர்சனம், ஆய்வு, கோட்பாடுகள் போன்ற வகையான ஆக்கங்கள் கொண்ட நூலாக இருத்தல் வேண்டும்

மொழிபெயர்ப்பு நூல்

மொழிபெயர்ப்பு நூலின் மூலப்படைப்பு உலகின் எந்த மொழியிலும் வெளிவந்தாகவும் இருக்கலாம்.

மொழிபெயர்க்கப்படும் நூல் ஆக்க இலக்கியமாக இருத்தல் வேண்டும்.

விதிகள்

விருதுக்காக அனுப்பப்படும் நூல் இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ISBN இலக்கம் பெற்று இருத்தல் வேண்டும்.

நூலாசிரியர்-மொழிபெயர்ப்பாளர் இலங்கையில் வசிப்பவராக
இருத்தல் வேண்டும்

நூலாசிரியர்-மொழிபெயர்ப்பாளர் பற்றிய விபரக் கொத்து, சமர்ப்பிக்கப்படும் நூலுடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.

ஒவ்வொரு நூலின் மூன்று பிரதிகள் அனுப்பப்படல் வேண்டும்

நூலின் பிரதிகள் நேரடியாகவோ தபால் மூலமாகவோ 2023ஆம் ஆண்டு ஜனவரி 15ந்திகதி முன்னதாகக் கீழ் காணும் விலாசத்திற்கு
சேர்க்கப்படல் வேண்டும்.

முகவரி-Duraivi, c/o Vijaya General Stores, 85, Wolfendhal Street, Colombo-13.

மேலதிகத் தொடர்புகளுக்கு-மேமன்கவி-0778681464,துரைவி 011-2327011,

duraivi1931@gmail.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :