சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையின் 2023/2024ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இளைஞர் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் அஸ்ஷேக், அஸ்ஸய்யித் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் இப்னு அப்துல் சமத் ஆலிம் மக்கத்தார் வாப்பா (காதிரி,ரிபாயி,நக்ஸபந்தி,ஜிஸ்தி,ஜதரரூசி,ஸூபி) அவர்களின் வழிகாட்டலிலும், தவிசாளர் மெளலவி ஏ.எம்.அஸ்பான் (அல் - கெளஸி) அவர்களின் தலைமையிலும் அஸ்ஸய்யித் யஹ்யா மெளலானா (ஸபீதிய்) அவர்களின் முன்னிலையிலும் மற்றும் சற்குரு இளைஞர் பேரவையின் ஆலோசகர் எம்.எம்.சப்றாஸ் மன்சூர் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இதன்போது அமைப்பின் 2023/2024ஆம் ஆண்டுக்கான சற்குரு இளைஞர் பேரவை நிர்வாக தலைவராக எம்.எச்.எம்.றஸான் தெரிவுசெய்யப்பட்டதுடன் உப தலைவராக ஏ.எம்.எம்.ரிழ்வான் ஆசிரியரும் செயலாளராக தொழிலதிபர் எம்.என்.எம்.றிஸ்தி உபசெயலாளராக ஐ.எம்.எம்.அப்ளல் பொருளாளராக சி.எம்.எம்.சப்னாஸ் உபபொருளாளராக ஏ.எம்.ஹாஜீப் ஆகியோர் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டனர்
0 comments :
Post a Comment