யாப்பின்படி கெபினட் அமைச்சசர்கள் 30 பேர் வரை அதிகரிக்கலாம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களால் மேலும் கெபினட் அமைச்சர்களாக பலரருக்கு புதிதாக நியமனம் கொடுக்க உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
அரசில் மீதமாக உள்ள அமைச்சுப்பதவிகளை நியமிக்க வேண்டும் என, பல சந்தர்பங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனகட்சியினால் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.பொதுஜனபெபெரமுன கட்சியில் ஜோன்ஸ்டன் பெனேன்டோ,பவித்ரா வன்னியாராச்சி, சீ.பி.ரத்னாயக்க, எஸ்.எம்.சந்திரசேன அமைச்சுப்பதவிகள் கிடைக்க உள்ளதுடன், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கட்சி தலைவர் ஜீவன் தொண்டமான்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் கிடைக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் சமகி பலவேகய கட்சியிலும் ஒருவர் அல்லது இருவருக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் தேர்தல் ஒன்றை நடாத்த இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமே.
(தகவல் மாற்று ஊடகம்)
0 comments :
Post a Comment