கல்முனை "யங் பேட்ஸ்" விளையாட்டுக்கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகத்தின் ஆறாவது சீருடை அறிமுக நிகழ்வும் கடினபந்து கிரிக்கெட் போட்டியும் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய மைதாதனத்தில் "யங் பேட்ஸ்" விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.வை.பாயிஸ் இன் ஏற்பாட்டில், தலைவர் எம்.எம்.மர்சூக் தலைமையில் நேற்று (26) மாலை இடம்பெற்றது.
சீருடைக்கான அனுசரணை "யங் பேட்ஸ்" கழகத்தின் ஆலோசகர் எம்.எச். இக்றாம், போட்டிக்கான அனுசரணை ஸம்ஸம் றியல் எஸ்டேட் உரிமையாளர் டொக்டர் ஏ.எல்.எம்.றஹ்மான் ஆகியோரின் அனுசரணையில் நடைபெற்ற
இச்சினேகபூர்வ கடினபந்து 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் கல்முனை "யங் பேட்ஸ்" விளையாட்டுக் கழகத்தினரை எதிர்த்து கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகத்தினர் மோதினர்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்படுத்தாடிய கல்முனை "யங் பேட்ஸ்" விளையாட்டுக் கழகத்தினர், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றனர்.
157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழக அணியினர் மிகவும் சிறப்பாக இறுதி வரை துடுப்பெடுத்தாடி இறுதி பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மிக அபாரமாக அவ்வணியின் என்.ஜே.எம்.ஜெஸான் துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைந்தனர்.
இதனடிப்படையில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழக அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகத்தின் வெற்றி ஓட்டத்தை பெற்றுக் கொடுத்த என்.ஜே.எம். ஜெஸான்
தெரிவானார். இவருக்கு பணப் பரிசு மற்றும் கிண்ணமும் வழங்கி அதிதிகளால் கெளரவிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கே.எம்.அப்துர் ரஸாக் (ஜவாத்) கலந்து கொண்டு கழகத்தின் சீருடை அறிமுகம் மற்றும் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி கெளரவித்தார்.
இங்கு கெளரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்; சட்டத்தரணி ஏ.ரொஷான் அக்தர், விசேட அதிதிகளாக கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.பளீல், கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எஸ்.எல்.எம்.லாபிர், அக்கழகத்தின் முகாமையாளர் முஸ்தகீம் மெளலானா ஆகியோரும் கல்முனை "யங் பேட்ஸ்" கழகத்தின் முகாமையாளர் ஏ.பி.எம்.அர்ஷாத், அக்கழகத்தின் உயர் பீட உறுப்பினர் எம்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் உட்பட பிரதேச விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment