ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற நான்கு பேர் 41 நாட்களாகியும்வீடு திரும்பவில்லை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 25ம் திகதி ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற நான்கு பேர் தொடர்பான எந்த தகவலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்பத்தொரு (41) நாட்களாகியும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுத்தருமாரும் மீனவர் அமைப்புக்களும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

படகு உரிமையாளர் மீன்படி கூட்டுறவு சங்கம், அல் ஸபா மீனவர் கூட்டுறவு சங்கம், வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகம் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிமை (05.11.2022) வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலயே தங்களது உறவுகளை மீட்பதற்கு சம்மந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 25ம் திகதி தகப்பன் மற்றும் மகன் உட்பட நான்கு மீனவர்கள் தொழிலுக்காக வாழைச்சேனையில் இருந்து கடலுக்கு சென்று இன்று (05.11.2022) வரை கரைக்கு திரும்பவில்லை என்று மீனவர்களின் உறவினர்களும் மீனவ அமைப்புக்களும் ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம் என்பவற்றுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மீனவர்கள் காணாமற் போன விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர், காணாமல் போனவர்களின் உறவினர்களும் தெரிவித்திருந்த போதிலும், தேடுதல் நடவடிக்கையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அசமந்த போககே காணப்படுவதாக மீனவ அமைப்புக்களும் காணாமற்போனவர்களின் உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசாங்கத்தினால் ஆழ்கடலுக்குச் செல்லும் படகுகளின் தொடர்புகளை அறிந்து கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.எம்.எஸ். என்ற கருவியை காணாமல் போயுள்ள படகில் பூட்டுவதற்காக முற்பணம் செலுத்தப்பட்டிருந்த போதிலும் குறித்த தினத்தில் உரிய கருவி கிடைக்காத சந்தர்ப்பத்தில் இரண்டு நாட்கள் படகு தொழிலுக்கு செல்வதற்கான ஆயத்த நிலையில் காத்திருந்து கருவி கிடைக்காத சந்தர்ப்பத்தில் கடலுக்கு சென்றதாகவும் உரிய நேரத்தில் படகில் ஈ.எம்.எஸ். என்ற கருவி பொருத்தப்பட்டிருந்தால் சில வேளை இந்த இக்கட்டான நிலை தோன்றி இருக்காது என்று காணாமல் போன படகின் உரிமையாளர் எம்.எஸ்.அன்வர் தெரிவித்தார்.

41 தினங்களாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று வரை கரைக்குத் திரும்பவில்லை என்பதுடன், அம் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மீனவ அமைப்புக்கள் உதவிகள் செய்த போதிலும் அது எத்தனை நாட்களுக்கு சாத்தியம் என்றும் எங்களுக்கு எங்களது உயிர்களை மீட்டுத்தாருங்கள் என்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதில் வாழைச்சேனையை சேர்ந்த கே.யூ. அஸ்ஸனலி, அவரது மகன் ஏ.எம்.முஹாஜித் மற்றும் எம்.எச்.எம்.றிஸ்வி, பி.எம்.இர்ஷாத் ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமற் போயுள்ளனர்.

இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் மற்றும் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :