பசறை வலயக்கல்வி அலுவலத்தின் பிந்தங்கிய 6 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
சறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பிந்தங்கிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பதுளை பிரன்லி சிப் அமைப்பின் தலைவர் எஸ்.யசோதராஜன் தலைமையில் பசறை தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதிகளாக லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி. கணேசமூர்த்தி கலந்து கொண்டதுடன், நலிவுற்றோர் நலன்காப்பு நிதியத்தின் செயலாளர் நாயகமும் மற்றும் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் செயலாளருமான செ.ராமகிருஷ்ணன் அவர்களும், திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதித் தலைவரும் நிதிப் பணிப்பாளரும் மற்றும் மன்னார் நகரசபை உறுப்பினருமான சு. பிருந்தாபனநாதன் அவர்களும், விசேட அதிதிகளாக வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் மோகனோஸ்வரன், இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும், பசறை தேசிய கல்லூரியின் அதிபர் கே.எம்.சீ.பிரபாகரன் அவர்களும் கோயில்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தலைவரும் நலிவுற்றோர் நலன்காப்பு நிதியத்தின் உறுப்பினருமாகிய அ. சூரியகுமார் அவர்களும், சமூக நலன்விரும்பிகளான ராஜ்குமார் அவர்களும், பூபாலன் அவர்களும் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரன்லி சிப் பௌன்டேசனின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாணவர்களும் தலா ரூபா 4000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கு லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பு மற்றும் இலங்கை நலிவுற்றோர் நலன்காப்பு நிதியம் இணைந்து நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பல சேவைகளைச் செய்து வரும் லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பையும் பாராட்டி கௌரவித்தனர். இந் நிகழ்வினை பதுளை பிரன்லி சிப் அமைப்பினர் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :