கொழும்பு றோயல் கல்லூரியின் 67வது மீலாதுன் நபி விழா


ஏ.எஸ்.எம்.ஜாவித், அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு றோயல் கல்லூரியின் இஸ்லாமிய சங்கம் ஏற்பாடு செய்த கல்லூரியின் 67வது மீலாதுன் நபி விழா நேற்று (12) கல்லூரியின் நவரங்க கலா கேட்போர் கூடத்தில் இஸ்லாமிய சங்கத்தலைவர் ஜிப்ரியின் வழி நடத்தலில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.பி.எப்.குணதிலக தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக டொக்டர் அப்லாஹ் சாதிகீன் கலந்து கொண்டதுடன் மீலாத்தின விசேட உரையை அஸ்ஸெய்க் மௌலவி ஸாகிர் மீஸ்பா நிகழ்த்தினார். நிகழ்வில் பல கௌரவ அதிகளுடன் மாணவர்கள் பெற்றோர்கள் என பெருமளவானவர்கள்; கலந்து கொண்டனர்.
இதன்போது இஸ்லாமிய சங்கத்தினால் பொதுவாக நடாத்தப்பட்ட இஸ்லாமியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னங்கள் அணுவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் கல்லூரி மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :