ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு அல் - ஹிக்மா கல்லூரியில் '21ஆம் நூற்றாண்டில் ஊடகம்' என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடகக் கருத்தரங்கு 7ஆம் திகதி திங்கட்கிழமை முழு நாள் கருத்தரங்காக கொழும்பு அல் - ஹிக்மா கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் நடைபெற்ற இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், எம்.ஏ.எம்.நிலாம், , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் செய்தி - உதவிப் பணிப்பாளர் ஹாரிஸ் ஜுனைதீன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் சமூக ஊடக வலையத்தளங்கள் , பற்றி இஸ்பாஹான் சாப்தீன், தொலைக்காட்சி. படப்பிடிப்பு சம்பந்தமாக அஷ்ரப் ஏ சமத், தமிழ்மூலமான மொழி அறிவு பற்றி அஷ்ஷேக் ஜெம்சித் ஆசிரியா் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினாா்கள். இப் பயிற்சிப் பட்டரையில் 120க்கும் மேற்பட்ட சிரேஸ்ட .கனிஸ்ட மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனா். இவா்களுக்கு பத்திரிகை, இலக்ரோனிக், வானொலி, பற்றி விரிவுரைகளும் செயல்முறையும் நடாத்தப்பட்டன
போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் , செயற்பாட்டு உறுப்பிணா்களான ஆசிரியை சாமிலா, ஆங்கில செய்தி ஊடகவியலாளா் நாளீர் ஜமால்தீன், முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளா் ஊடகவியலாளா் சாதீக் சிஹான் ஆகியோறும் கலந்து கொண்டனா்.
மற்றும் அல் ஹிக்மா தேசிய பாடாசலையின் அதிபரும் கவிஞருமான முல்லை முஸ்ரிபாவின் ஏற்பாட்டில், நடைபெற்ற இக்கருத்தரங்கில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி த்துறைத் தலைவா் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரம் பொறுப்பாளர், மற்றும் கௌன்சிலா் பானூ பிரகாஷ், தினகரன் ,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனா். விடிவெள்ளி பிரதி ஆசிரியா் ,அப்துல் பரீல் வீரகேசரி ஊடகவியலாளா் எம்.வசீம் ஆகியோறும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டனா். அத்துடன் பாடசாலை ஆசிரியா்கள், பழைய மாணவா்களும் கலந்து சிறப்பித்தனா்.
0 comments :
Post a Comment