நவீன கற்றல் கற்பித்தல் நுட்பங்களுடன் கூடிய பௌதீக அபிவிருத்தியினை மேம்படுத்த பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்விச் சுற்றுலா !





நூருல் ஹுதா உமர்-
றக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான கல்விச் சுற்றுலா முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாடின் ஒருங்கிணைப்பில் பாலர் பாடசாலைகளில் கற்றல் வட்டங்களை நிறுவுதல் தொடர்பான விசேட களப் பயணமாக இக்கல்விச்சுற்றலா அமைந்திருந்ததுடன் நவீன கற்றல் கற்பித்தல் நுட்பங்களுடன் கூடிய பௌதீக அபிவிருத்தியினை கற்றல் வட்டங்களை நிறுவுவதன் மூலம் அடைந்து கொள்ளல் எனும் நோக்கோடு இக்கல்விச்சுற்றுலா அமைந்திருந்தது.

இறக்காமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி அஹமட் நஸீல் தலைமையில் இடம் பெற்ற இக்கல்விச் சுற்றுலாவில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் - அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.ஏ.பி.எஸ்.விஜேரத்ன, இறக்காமம் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.வஹாப், ஆலயடி வேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா, அம்பாரை பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தனுஜா, மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :