பைந்தமிழ்ச் சுடர் நீலையூர் சுதாவின் “கிடுகு வீடு” நூல் அறிமுக விழா நேற்று (09) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வறிமுக விழாவுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்ணாயக்க முதன்மை விருந்தினராகவும், திருகோணமலை மாவட்ட செயலாளர் பீ.எச்.என்.ஜயவிக்ரம, சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க, வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) ஏ.மன்சூர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) (திருமதி) ஆர்.யூ.ஜலீல் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கௌர விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது, கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றபோடு புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்ணாயக்காவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment