ஏறாவூர் நகரத்தின் சிறந்த சமூக சேவையாளர்களான பிரதேச செயலாளர் ,சமூக சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஆன்மீக துறையில் சிறந்து விளங்கும் காரி இற்கானவாழும் போதே வாழ்த்திக் கௌரவிக்கும் நிகழ்வு
ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியமும் (SSDO ERAVUR) ,மன்னார் மாவட்ட பொது சமூக சேவை அமைப்பும் இணைந்துஅலிகார் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வாழும் போதே வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றினை அண்மையில் நடாத்தி இருந்தது .இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத் கலந்து கொண்டதுடன், சமூக சேவை உத்தியோகத்தர் SAC.நஜிமுதின் (SSO) கௌரவ அதிதியாகவும், கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் MFM பாறூக், பொது சமூக சேவை அமைப்பின் தலைவர் மௌலவி ஹம்ஸா தாஹீர் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூரின் சிறந்த சமூக சேவையாளர்களாக விழாவின் பிரதம அதிதி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத் ஏற்பாட்டுக் குழு அமைப்புக்களின் கூட்டுத்தலைவர்களான பாறூக், ஹம்ஷா தாஹீர் ஆகியோரால் கௌரவ விருது வழங்கி கௌகௌரவிக்கப்பட்டனர். அத்துடன் சமூக சேவை உத்தியோகத்தர் SAC.நஜிமுதீன் மற்றும் ஏறாவூர் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள் உற்பட முகைதீன் ஜும்மா பெரிய பள்ளி வாயல் பேஷ் இமாமும், சர்வதேச குர்ஆன் மனன போட்டிகளிலும், காரீகளுக்கான கிராத் போட்டிகளிலும் கலந்து கொண்டு உயர் பட்டமாகிய இஜாஷா பட்டம் பெற்று தாய் நாட்டுக்கும் ஊருக்கும் புகழ்தேடித் தந்த மௌலவி அல்ஹாபீழ் அல்காரி இப்ராஸ் பாகவீ அவர்களுக்கும் அவர்களின் தன்னலம் பாராத சமூக சேவையினைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மன்னார் பொது சமூக சேவை அமைப்பின் தலைவர் சமௌலவி ஹம்ஷா தாஹீர், சமூக சேவை அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் பாறூக், பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் ஆகியோரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழா முடிவில் ஏறாவூர் சமூக சேவை அபிவிருத்தி ஒன்றிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் பொது சேவைகளுக்கான பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment