தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க மையம் ஏற்பாடு செய்த மீலாதுந் நபி கலாச்சார நிகழ்வுகள்.(படங்கள்)


லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க மையம் புனித மீலாதை முன்னிட்டு ஏற்பாடு செய்த "கலாச்சார நிகழ்வுகள்" இன்று (29) பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடத்தில் பல்கலைக்கழக சமூக நல்லிணக்க மையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.எம். பைறோஸ் தலைமையில் நடைபெற்றது.

போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய தென்கிழக்கு பல்கலைக்கழக பீடங்களின் மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நல்லிணக்க உரை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச். ஹாரூன், இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலீம், பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாய்தீன், கலை, கலாச்சார பீட அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர், மற்றும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள், சகல பீடங்களையும் சேர்ந்த மாணவ பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க மையம் நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய பல்கலைக்கழகத்தின் பீடங்களின் மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் உப வேந்தருக்கும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :