பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் பூமணி அம்மா அறக்கட்டளை நிறுவனத்தின் மூலம் சரவணையை பிறப்பிடமாக கொண்ட அமரர் இராசு மாணிக்கம் அவர்களின் நினைவாக திருமதி செல்வேந்திரன் லோகா குடும்பத்தினரின் நிதி உதவியுடன் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் றுசான் தவநாதனுக்கு மடிக்கணனி வழங்கும் நிகழ்வு கொழும்பு 7 பொது நூலக தகவல்வழங்கும் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் அறக்கட்டளையின் மேல்மாகாணப் பொறுப்பாளர் றெஜினா இளஞ்செழியனின் தலைமையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், மலயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் முனைவர் சதீஸ்குமார் சிவலிங்கம், மற்றும் அறக்கட்டளையின் உதவிச் செயற்பாட்டாளர் இளஞ்செழியன், வடமாகாண சபையின் முன்னாள் தவிசாளரும்; அறக்கட்டளையின் செயலாளருமான விந்தன் கனகரட்ணம், மூத்த ஊடகவியலாளர் திருமதி அன்னலட்சுமி, அறிவிப்பாளர் சீதாராம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்..
இலங்கையில் உள்ள தேவையுடையோர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் இன்று பல்கலைக்கழகம் சென்றுள்ள ஏழை மாணவர் ஒருவருக்கு பெறுமதியான மடிக் கணனி ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாங்கள் எண்டைக்குமே சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழர்கள் என்று சொல்லும்போது வடக்கு கிழக்கு தாயகத்திலே ஈழத் தமிழரும் வடகிழக்குக்கு வெளியே மலையகத்தை தளமாகக் கொண்டு மலையகத் தமிழரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்களும்; வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நாடு இன்று வரை ஒரு சிங்கள பௌத்த நாடாகவே இருந்து வருகின்றது. அதை சொல்வதில் தயங்கத் தேவையில்லை. உண்மை அதுதான். அப்படி இருக்க வேண்டாம் இருக்கக்கூடாது இந்த நாடு சிங்கள. தமிழ் முஸ்லிம் நாடு பௌத்த இந்து இஸ்லாம் கத்தோலிக்க நாடு என்று மாற்றித் தொலையுங்கள் என்று சொன்னால் அதiயும் கேட்க மாட்டிக்கிறார்கள். நான் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பல முறை எல்லா மொழிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன். இனியும் சொல்லுவேன்.
சமீபத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது நான் அவரிடமும் சொன்னேன் அதேபோல் இந்த நாட்டிலே சமீபத்திலே காலிமுகத்திடலை மையமாகக் கொண்டு போராட்டங்களை நடாத்தி முன்னாள் ஜனாதிபதியை விரட்டியடித்த அந்த அறகலை கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லக்கூடிய அந்த கிளர்ச்சி செய்த இளைஞர்கள் இன்று பல்வேறு அமைப்புகளாக இருக்கின்றார்கள் அந்தக் குழுக்களை சந்தித்தபோது ஆறு ஏழு முறை அவர்களிடமும் சொன்னேன் இந்த நெருக்கடி பின்னாலே வரக்கூடிய மாற்றம் இருகக்கின்றது. இந்த மாற்றம் வரவேண்டும். ஆனால் எந்த மாற்றமும் வராது அப்படி வருகின்ற மாற்றம் முற்போக்கான மாற்றமாக இருக்க வேண்டும். அத்தகைய முற்போக்கான மாற்றம் என்றால் உங்கள் மாற்றத்திற்கு அடிப்படையாக இந்த நாடு இருக்கக்கூடிய பண்முகத் தன்மையை அடிப்படையாகக் கொள்ளுங்கள் என்று மீண்டும் மீண்டும் சொன்னேன். சிங்கள மொழியிலும் சொன்னேன் தமிழ் மொழியிலும் சொன்னேன் ஆங்கில மொழியிலும் சொன்னேன் அதை ஏற்றுக் கொள்ளா விட்டால் இந்த மாற்றம் முற்போக்கான மாற்றமாக ஒடுக்கப்படும் இனத்தை பிரதிநிதியாக இருக்கும் மனோ கணேசனான நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொன்னேன் அதுதான் உண்மை.
இன்று இந்த நெருக்கடிக்கு காரணம் உணவு இன்மை, மருந்து இன்மை எரிபொருள் இன்மை அல்ல அது அடையாளம்தான் சிண்டம்ஸ் அடையாளம்தான் நோய் மூலகாரணம் அதுவல்ல நாட்டில் தீராத தேசிய இனப்பிரச்சனை இருக்கின்றது. உண்மையில் இன்னும் அந்தப்பிரச்சினை தீரவில்லை. தமிழ் தலைவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர்;களுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடாத்தி பல்வேறு உடன்படிக்கைகளை செய்தார்கள் கையெழுத்து இட்டார்கள். பிறகு இந்த நாட்டின் அரசாங்க தலைவர்கள் ஏமாற்றி விட்டார்கள். ஆகவே நாட்டில் தேசிய இனப்பிரச்சினை இருக்கின்ற காரணத்தினாலே அரச பயங்கரவாதம் வந்தது யுத்தம் வந்தது பிறகு யுத்தத்தை பல பிரதமர்களும், ஜனாதிபதிகளும் தீர்த்து வைக்க முயற்சி செய்தார்கள் பலர் போர் செய்தார்கள் ஒரு ஜனாதிபதி சமாதானத்திற்கான போர் செய்தார் சமாதானத்தை எப்படி போர் கொண்டு வரும் என்று எங்களுக்கு தெரியாது.
கடைசியாக ஒரு ஜனாதிபதி வந்து கண்மூடித்தனமான போர் செய்தார் அதுதான் உண்மை அந்த போரினால் நமது உடன் பிறப்புக்கள் ரத்தத்தின் ரத்தங்கள் கொல்லப்பட்டார்கள். போராளிகள் கொல்லப்பட வேண்டும் என்றே நடாத்திக் கொண்டு வந்தார்கள் ஆனால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் அதுதான் கண்மூடித்தனமான யுத்தம் சாட்சியம் இல்லாத யுத்தம். ஏன் சொல்லுகின்றேன் என்றால் அதனால்தான் யுத்தத்ததை முடித்து வைத்த காரணத்தினால்தான் ஜனாதிபதிக்கும் அந்த குடும்பத்திற்கும் சகோதர சிங்கள மக்கள் இலவச அனுமதியை வழங்கி விடார்கள். எதையும் செய்துவிட்டுப் போங்கள். திருடுங்கள், கொலை செய்யுங்கள், கொள்ளையடியுங்கள், பிழை செய்யுங்கள், கடத்துங்கள் என்று எதையும் செய்யலாம் என்ற அனுமதியை வழங்கினார்கள்.
ஆகவேதான் முன்னர் சொன்தைப்போல 2005 தொடக்கம் 2009 வரை கொழும்பு மாநகரத்திலே எங்கள் மக்களை எனது மக்களை வெள்ளை வேன்களைக் கொண்டு வந்து நாய் பிடிப்பதைப்போல் பிடித்துச் சென்றார்கள். அதை எதிர்த்துத்தான் நானும் எனது நண்பண் ரவிராஜூம் போரடினோம் ரவியை கொலை செய்து விடார்கள் என்னை கொலை செய்ய முடியவில்லை. ஆனால் நானும் ரவியும் ஓடி ஒழியவில்லை. இங்கேதான் இருந்தோம். இன்று நான் எங்கே வாழ்ந்து கொண்டிருந்தேனோ அங்கேதான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.ஆகவே நானும் ரவியும் சினமா கீரோக்கள் அல்ல நாங்கள் நிஜ கீரோக்கள் நாங்கள்.
அன்று பாதுகாப்பு செயலளராக இருந்தவருக்குத்தான் நாட்டின் ஜனாதிபதியாக பதவி கொடுத்தார்கள். எதையும் செய்யலாம் என்ற அனுமதியைப் பெற்றுவிட்டு எதiயும் செய்யாமல் அநீதியை மாத்திரம் செய்து விட்டு ஜனாதிபதி ஓடிப்போனார். அதன் விளைவுதான் இந்த நெருக்கடி. முற்போக்கான மாற்றத்ததை ரனில் விக்ரமசிங்க புரிந்திருக்க வேண்டும். சஜித் பிரேமதாஸவும் புரிந்திருக்க வேண்டும். அறகல என்ற புரட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பு இருக்கின்றது. இந்த அறகல என்ற கிளர்ச்சிக்காரர்கள் வந்தால் எல்லாம் மாறிவிடும் என்று இல்லை. நான் சொல்லமாட்டேன் அப்படி அடையாளம் தெரியவில்லை. அவர்களிடமும் பழைய சிங்கள தேசியவாதம்தான் போய்க் கொண்டிருக்கின்றது. தமிழர்களைப் பற்றி சும்மா எதiயாவது எடுத்து விடுகின்றார்கள் அவ்வளவுதான். அப்படியல்ல நான் சொல்லும் மாற்றம் அதிகாரபூர்வமாக இருக்க வேண்டும். சட்டபூர்வமாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டிலே அரசியலமைப்பிலே சிங்களம்தான் பிரதான மொழியாக இருந்தது. ஆட்சி மொழியாக இருந்தது. எழுபதுகளிலே இந்திய அரசாங்கத்தின் நெருக்குதல்கள் காரணமாக தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றது. ஆனால் நடைமுறையில் இல்லை. அந்த மொழி சார்ந்த ஒரு துறையும் எனக்கு கீழே இருந்தது. நான் மிகவும் பாடுபட்டேன். எழுபது வருட சாபத்தை நான்கு வருடத்தில் தீர்த்திருக்க முடியாது. முயற்சி செய்தேன். பௌத்த மதம்தான் பிரதான மதமாக சொல்லப்பட்டே இருக்கின்றது. அது இல்லாத ஒரு மாற்றம் வேண்டும். அதைத்தான் அறகல கிளர்ச்சியாளர்களிடம் சொல்கின்றேன் அதை மாற்றுங்கள். மாற்ற வேண்டும் என சொல்லுங்கள். இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். மதம் என்பது தனிப்பட்ட விவகாரமாக இருக்க வேண்டும்.
புத்த பிக்குகளை விகாரைகளுக்கு அனுப்புங்கள், எங்களது குருமார்களை கோவில்களுக்கு அனுப்புகிறோம், இமாம்களை பள்ளிவாசல்களுக்கு அனுப்புங்கள், வண பிதாக்களை ஆலயங்களுக்கு அனுப்புங்கள், அரசியல் வேண்டாம் அவர்களுக்கு அதுதான் உண்மையான மாற்றம். அதை செய்யத் துணிவீர்களானால் பகிரங்கமாக அறிவிப்பீர்களேயானால் இந்த அறகல கிளர்ச்சிக்காரர்களை நான் மாலையிட்டு வரவேற்று அவர்களுக்கு உரிய இடத்தை தர தயாராக இருக்கின்றேன். அது வரையிலே இந்த பம்மாத்துக்கள் எல்லாம் வேண்டாம். இந்தமாதிரி பல விசயங்களை நான் எனது அரசியல் வாழ்விலே பார்த்து விட்டேன். இதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
ஆகவே இது நெருக்கடியின் நுழைவுதான் இன்று இந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த பூமனி அம்மாவின் அறக்க கட்டளை காரணமாக இந்த நல்ல நெஞ்சங்கள் காரணமாக நாங்கள் இந்த அன்பளிப்பை வழங்கி இருக்கின்றோம்.
ஏனென்றால் இத்தகைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்குவது வீடற்ற ஏழைகளுக்கு வீடுகளை வழங்குவது. வாடகை வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களுக்கு பாமர மக்களுக்கு சொந்த வீட்டை வழங்குவது வைத்தியசாலைகளை கட்டுவது கட்டங்களை உருவாக்குவது போன்றவற்றிக்கு செலவழிக்கக் கூடிய பெருங்கோடி பணம்தான் நாசகார யுத்தத்திற்கு பயன் படுத்தப்பட்டது. இந்த பெருங்கோடி துறைதான் நாட்டையே கடத்திக் கொண்டு வெளியில் வைத்திருக்கின்றார்கள்.
ஆகவேதான் சொல்கின்றேன் இந்த நெருக்கடிக்கு மூலகாரணம் இந்த எரிபொருள் வரிசையோ உணவு வரிசையோ அல்லது மருந்து வரிசையோ அல்ல அதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த ஒடுக்கப்பட்ட இனம் மறக்கடிக்கப்பட்ட ஒரு இனம் கொலை செய்யப்பட்ட ஒரு இனம் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு இனம் 1983 இனக் கலவரத்தின்போது ஹெவலக் டவுனிலே எமது இரண்டு வீடுகள் எரியூட்டப்பட்டன, எனது தந்தையின் வாகனங்கள், சித்தப்பாவின் வாகனங்கள் எரியூட்டப்பட்டன. தந்தையின் புறக்கோட்டை வர்த்தக நிலையம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆகவே இந்த கொழுத்தல், கொள்ளையடிக்கப்பட்டதற்கு எல்லாம் நாங்கள் முகம் கொடுத்துள்ளோம். மீண்டும் வாழையடி வாழையாக எழுந்து வந்திருக்கின்றோம்.
ஆகவே இன்று எமது இனம் சக்தியுள்ளதாக எழ வேண்டும் என்றால் அதனை அரசியல் வாதிகளால் மட்டும் செய்துவிட முடியாது. மக்கள் பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்கள், சமுகத் தொண்டு நிறுவனங்கள். ஊடகவியலாளர்கள். வர்த்தக செயற்பாட்டாளர்கள். சிந்தனையாளர்கள், புலம் பெயர்ந்தோர்கள் ஆகிய எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கரம் கோத்துக் கொண்டால்தான் சமுகத்தை முன்னேற்றலாம். விடுவிக்கலாம் தடைகளை, சங்கிளியை உடைத்து நொருக்கி முன்னேற முடியும். அந்த திடசங்கர்ப்பம் உள்ளது. ஆனால் பின்னடைவுகள் இருந்தாலும்கூட மனம் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்.
நான் ஒரு விக்ரமாதித்தன்மாதிரி மனம் தளரமாட்டேன். மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்றேன். அதன் அடையாளமாகத்தான் இந்த நல்ல நிகழ்வுக்கு வந்திருக்கின்றேன். ஒரு கணனி வழங்கினாலும் ஓராயிரம் கணனி வழங்கியதுபோல் உள்ளது. பின்னணியில் இருப்பது அந்த உணர்வுதான் நாம் நாங்கள் என்ற உணர்வு. அதை அடையாளப்படுத்தியதே இந்த பூமணி அம்மா அறக்கட்டளை என்றார் மனோ கணேசன்.
இதன்போது மாணவர்களின் நடன நிகழ்வும் இடம் பெற்றதுடன் பங்குபற்றிய மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலி ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து தாயக இலங்கை மக்களுக்கு நாடளாவிய ரீதியில் வாழ்வாதாரம் குறைந்த மக்களை இணங்கண்டு அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருவதோடு மட்டுமல்லாது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், பாதணிகள், புத்தகப் பைகள், சத்துணவுத் திட்டங்கள், கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், சுயதொழில் செய்வோருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விடயங்களில் தமது சேவைகளை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment