உலகிற்கு முதல் சைவசித்தாந்த நூலை தந்தவரும், நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை அளித்த மூத்த சித்தரான திருமூலர் பெருமானின் குருபூஜையை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றுவந்த மாபெரும் சண்டி ஹோமம், நேற்று(8) செவ்வாய்க்கிழமை ஆறுமணி நேர பாரிய யாகத்துடன் நிறைவு பெற்றது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் முன்னிலையில் மட்டக்களப்பு அமிர்தகழியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(6) ஆரம்பமாகிய சண்டி ஹோமம், நேற்று (8) செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இலங்கையின் இலங்கை பிரபல வேத வாத்தியார் சிவஸ்ரீ வத்சாங்க குருக்களின் தலைமையிலான சிவசிறி சிவபால குருக்கள் உள்ளிட்ட வேத விற்பன்னர்கள் எண்மர் சண்டி ஹோமத்தை நடத்தினர்.
அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்தவர்கள்.
ஹோமத்துக்கான திரவியங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டிருந்தன.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி சங்கல்பத்தில் இருந்து யாகத்தில் பங்கேற்றார்.
யாகத்தில் சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் உப தலைவர் மனோகரன் நமசிவாய மகேஸ்வரன் சுவாமி தியாகராஜா காரைதீவு பக்தர்களான ஜெயசிறில் சகாதேவராஜா கீதா பிரி மற்றும் கனடா குமார் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
நேற்று (8) செவ்வாய்க்கிழமை அபூர்வமான ஐப்பசி பௌர்ணமி திதியில், அதிகாலை 3 மணிக்கு மாபெரும் சண்டி ஹோமம் ஆரம்பமாகியது.
தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் ஆதாரமாக இருக்கும் 13 சக்திகளுக்கும் யாகத்தில் சிறப்பு பூஜைகள், 64 உபசாரங்கள் இடம் பெற்று
காலை 9 மணிக்கு பூர்ணாகுதி இடம் பெறுதலுடன் ஹோமம் நிறைவுக்குவந்தது.
0 comments :
Post a Comment