அக்கரைப்பற்று பிரதேச சபையில் காய்கறி அறுவடை



நூருல் ஹுதா உமர்-
னாதிபதியின் நாட்டு மக்களுக்கான "பாதுகாப்பான, முழுமைப்படுத்தப்பட்டஉணவு" என்ற திட்டத்தின் அடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேச சபையினுடைய முன்வளாகத்தில் கத்தரி, மிளகாய் போன்ற மரக்கறி வகைகளை முன்னோட்டமாக (ஒத்திகையாய்) பயிரிடப்பட்டது.. அப்பயிர்களில் இருந்து புதன்கிழமை காய்கறி அறுவடை நிகழ்வு நடைபெற்றது.

திட்டத்தின் ஒத்திகையில் கிடைத்த பரிபூரணமான திருப்திகளோடு அக்கரைப்பற்று பிரதேச சபை உலக வங்கியின் உதவியுடன் (LDSP) திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு வட்டாரங்களிலும் தெரிவு செய்யப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை ஊக்குவிக்க காய்கறி நடும் திட்டத்தினையும் ஒரு அங்கமாக செயல்படுத்த ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸீக் தெரிவித்தார். மேலும் அறுவடையில் பங்கெடுத்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எல்லோருக்கும் நன்றிகள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :