தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காரைதீவு பிரதேசம் வெள்ளத்தில் அமிழ இருந்த சந்தர்ப்பத்தில் முகத்துவாரம் இன்று (9) புதன்கிழமை வெட்டப்பட்டது.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தாழ இருந்த காரைதீவுப் பிரதேசம் காப்பாற்றப்பட்டது.
நேற்று (8) செவ்வாய்க்கிழமை மாலை பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபை ஊழியர்கள் முகத்துவாரம் வெட்டச் சென்றபோது சில மீனவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து அந் நடவடிக்கைகள் கைவிடப்பட்டது.
எனினும் அன்று இரவு விடிய விடிய பெய்த அடைமழையால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளநீர் நிரம்பியது. குடிமனைகள் பொது நிறுவனங்கள் ஆலயங்கள் அமிழும் நிலை தோன்றியது. பொது மக்கள் சென்று பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் முறையிட்டனர்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றது .
தவிசாளர் இன்று(9) புதன்கிழமை காலை ஊழியர்களுடன் ஸ்தலத்திற்கு விரைந்து வெட்டுவதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டார்.
கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் ஆலோசனையின்படி தவிசாளர் ஜெயசிறில் முன்னிலையில் முகத்துவாரம் வெட்டப்பட்டது.
அங்கு ஜேசிபி கனரக இயந்திரம் பழுதடைந்த காரணத்தினால் பொதுமக்களும் சபை ஊழியர்களும் இணைந்து இந்த முகத்துவாரத்தை வெட்டி அமிழ இருந்த காரைதீவுப் தேசத்தை காப்பாற்றினார்கள்.
இந்த வேளையிலே அங்கு சமுகமளித்த காரைதீவு போலீசார் இனிமேல் கொண்டு அதிகாரப்படி தவிசாளர் எடுக்கின்ற நடவடிக்கைக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து காரைதீவை மூழ்கடிக்க முற்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை உரிய நேரத்திலே எடுக்கப்படும்.
முதல் நாள் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை நாங்கள் எச்சரிக்கின்றோம் என்றும் தெரிவித்தார்கள்.
0 comments :
Post a Comment