வைத்திய பரிசோதனை முகாமும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் சனிக்கிழமை (26) வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இலங்கை குடும்பத்திட்ட சுகாதார சேவை நிலையத்தின் மட்டக்களப்பு நிலையம், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து இந்த நிகழ்வை நடாத்தியது.
சுகாதார சேவை நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப் கான், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் மனநல வைத்தியர் டான் சௌந்தரராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், குடும்ப வன்முறைககளால் பாதிக்கப்பட்டோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தொற்றும், தொற்றா நோய் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
அத்துடன், தெரிவு செய்யப்பட்ட பதினைந்து கர்ப்பிணித் தாய்மாருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான பிரசவப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment